பிப். 4ம் தேதி ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Jan 30, 2026, 18:59 IST
பிப்ரவரி 4ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 பிப்ரவரி 4 அன்று காலை 10.30ணிக்கு சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.