×

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் என்ன செய்தார்?- ஈபிஎஸ்

 

முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா முட்டுக்கட்டை போட்டது. கேரள முதல்வரிடம் நான் நேரில் பேசினேன். கேரள அரசு அணை கட்ட முயன்றதை தடுத்தது அதிமுக அரசு. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் என்ன செய்தார்? முல்லைப் பெரியாறு அணைக்காக எந்த முயற்சியும் செய்யவில்லை திமுக அரசு. கொரோனா காலத்தில் கடன் வாங்காமல் சிறப்பாக ஆட்சி செய்தோம், 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தோம். கொரோனா காலத்தில் தைப்பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தோம். மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கியது அதிமுக. பேரிடர் சவால்களை வென்று சிறப்பான ஆட்சி நடத்தியது அதிமுக. வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக. திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது. கடனில் தத்தளிக்கும் தமிழகத்தை மீட்க வேண்டியது முக்கியம். கூடுதல் வருவாய் வரும்போது கடன் வாங்குவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.