“70 படங்கள் நடிச்சும் ஒரு தேசிய விருது வாங்க முடியல.. அங்கேயே உங்களால பாஸ் பண்ண முடியல”- இபிஎஸ்
70 படங்கள் நடித்தும் கூட ஒரு தேசிய விருது வாங்க முடியவில்லை, அங்கேயே பாஸ் பண்ண முடியவில்லை. இங்க அரசியலையா பாஸ் பண்ணப் போறீங்க? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தாங்க.. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல், ஓடோடி விமானத்துல ஏறி வீட்டுக்கு போயிட்டாரு.. தவெக கூட்டத்துக்கு வந்தவர்களையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.. எப்படி மக்களை காப்பாற்றுவார்கள்? நூறு விஜய் வந்தாலும், எடப்பாடி தொகுதியில் ஒன்றும் செய்ய முடியாது. முதலமைச்சர் கூறியது போல அவரது உத்தரவால் வீரமணி கைது செய்யப்படவில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் கூறியுள்ளார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் குற்றச்சம்பங்கள் அதிகரித்துள்ளன.
விஜய் தேர்தல் பிரசாரம் செய்த பின்னும் எடப்பாடி தொகுதியில் நான்தான் வெற்றி பெற்றேன்.
70 படங்கள் நடித்தும் கூட ஒரு தேசிய விருது வாங்க முடியவில்லை, அங்கேயே பாஸ் பண்ண முடியவில்லை. இங்க அரசியலையா பாஸ் பண்ணப் போறீங்க? சட்டமன்றம் பட்டிமன்றமாக மாறிவிட்டது. தவெக ஏதோ ஒரு விபத்தில் ஆட்சி அமைச்சிட்டாங்க. பிள்ளை பிடிப்பது போல் தவெக வினர் 'எம்எல்ஏ 'க்களை பிடிக்கிறார்கள்”. ஜனநாயகன் படம் ஒரு வாரம்கூட ஓடல... அந்த தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி.. நாடு உருப்படுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.