×

திமுக 100 சதவீதம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது- எடப்பாடி பழனிசாமி

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேதுபதி-யை ஆதரித்து காந்திநகர் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார் 

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொன்மனச் செம்மல் எம்ஜி ஆர் வெற்றி பெற்ற தொகுதி இது வரலாற்று சிறப்புமிக்க தொகுதி இந்த இயக்கத்தை தோற்றுவித்த மாமனிதர் வெற்றி பெற்ற தொகுதி இந்த தொகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் சேதுபதியை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தத் தேர்தல் யார் வரவேண்டும்? யார் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கான சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் இந்த சட்டமன்ற தேர்தல். கருணாநிதி குடும்பம் தான் இந்த நாட்டை ஆள வேண்டுமே என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த தலையெழுத்தை மாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது செய்வீர்களா? அரசர்கள் ஆளும் போது தான் அவரது வாரிசு அவர்களுக்கு முடிசூட்டுவார்கள். கருணாநிதி அவருக்கு பிறந்த ஸ்டாலின் அவருக்கு பிறகு உதயநிதி என ஆள்வதற்கு தமிழ்நாடு என்ன பட்டா போட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது. வேறு யாரேனும் முதலமைச்சர் ஆகி கையெழுத்து போட்டால் செல்லாதா? இனி தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இந்த தேர்தலோடு கருணாநிதி குடும்பம் ஆட்சிக்கு வர முடியாத ஊழல் இந்த தேர்தலில் ஏற்படும்.  திமுக 100 சதவீதம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது

இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை, பாட்டி அம்மாக்கு கூட பாதுகாப்பு இல்லை 
இந்த அவல நிலை ஆட்சி வேண்டுமா?  அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்தது, மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. யார் தவறு செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதிமுக ஆட்சியில் அதனால் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது.இன்றைக்கு திறமை இல்லாத முதலமைச்சர் பொம்பை முதலமைச்சர் நாட்டை ஆளுகின்ற காரணத்தினால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை, இதற்குப் பொறுப்பானவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர். தமிழகத்தில் இதுவரை 6,999 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு 84 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் பெருமையாக கூறுகிறார். கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் சீரழிக்கப்பட்டுள்ள இந்த திமுக ஆட்சி தேவையா?இவ்வளவுக்கும் காரணம் கஞ்சா போதை ஆசாமிகள் தான். கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது, தடுத்து நிறுத்த திறமை இல்லாத முதலமைச்சர் ஆக ஸ்டாலின் உள்ளார்.  அண்ணா திமுக ஆட்சி மலர்ந்ததும் மூன்றே மாதத்தில் தமிழகத்தில் கஞ்சா இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் தமிழகத்தில் கஞ்சா அறவே இருக்காது சட்டத்தின் ஆட்சி நடக்கும்.

ஒட்டுமொத்த மக்களும் பாதுகாப்பாக இருந்த ஆட்சி அண்ணா திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் விலைவாசி அனைத்தும் உயர்ந்துவிட்டது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் அண்ணா திமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அரிசி விலை ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் அளவு உயர்ந்துவிட்டது. எண்ணெய் பருப்பு போன்ற அனைத்து பொருட்களும் விலையும் உயர்ந்து விட்டது.  திமுக ஆட்சியில் மின்கட்டணம் 67 சதவீதம் அளவு உயர்ந்து விட்டது. வீட்டு வரி கடை வரி என அனைத்தும் உயர்ந்து விட்டது” என்றார்.