☰
×

''நாங்க கைது பண்ண வெச்சோம்'' - எடப்பாடி பழனிசாமி   

 

அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது என அதிமுக பொதுச்செய்யலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டரான ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் இன்று மாலை கைது செய்யப்பட்டார். விசாரணை அதிகாரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார், கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவரை கைது செய்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 

அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!

இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய்… pic.twitter.com/07RYAbgBZx

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 27, 2026


இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், "அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது! முதல்வர் விஜய் அவர்களே.. Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !! இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.