☰
×

ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா? கலெக்டரைக் காப்பதா? அணையைக் காப்பதா?- ஈபிஎஸ் 

 

இப்படி Design Design-ஆக பிரச்னைகளை இழுத்து விடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா? கலெக்டரைக் காப்பதா? அணையைக் காப்பதா? என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்ததுதான் தவெக அரசின் மாபெரும் வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகளின் கூத்து, கோமாளித்தனத்தை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். தேனி சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல் தவெகவினர் நீர் திறந்ததாக செய்திகள் வருகின்றன. பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தவெகவினரே அணையை திறந்துள்ளனர். தேவையான நீர் இருப்பு இல்லாததால் சோத்துப்பாறை அணையை திறக்க அனுமதி வழங்கவில்லை. அணையை திறந்துவிட்டு ரீல்ஸ் எடிட் செய்ய தாமதமாகும் என்பதால் வீடியோவை உடனே வெளியிட்டுள்ளனர். அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. 

அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம். திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் Petromax லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர். இப்படி Design Design-ஆக பிரச்னைகளை இழுத்து விடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா? கலெக்டரைக் காப்பதா? அணையைக் காப்பதா? என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்ததுதான் தவெக அரசின் மாபெரும் வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.