×

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்- ஈபிஎஸ்

 

"டிட்வா" புயலின் காரணமாக கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “"டிட்வா" புயலின் காரணமாக சென்னை,  கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.