×

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் கூட நீடிக்காது- எடப்பாடி பழனிசாமி

 

பதவி சுகத்துக்காகதான் அதிமுகவில் இருந்து சிலர் தவெகவுக்கு சென்றனர். இங்கிருந்து சென்றவர்களுக்கு அந்த கட்சியில் மரியாதை இருக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அதிமுக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி என்பதெலாம் சகஜம். உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் கூட நீடிக்காது. பதவி சுகத்துக்காகதான் அதிமுகவில் இருந்து சிலர் தவெகவுக்கு சென்றனர். இங்கிருந்து சென்றவர்களுக்கு அந்த கட்சியில் மரியாதை இருக்காது. கவிர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டனர். உள்ளாட்சியை நல்லாட்சி என்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வென்றால், மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிப்பது சாத்தியமே!” என்றார்.

முன்னதாக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆனால் கூட்டத்தில் ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமாரை தொடர்ந்து ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. கே.சி.வீரமணியும் புறக்கணித்துள்ளார்.