×

லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம் - எடப்பாடி பழனிசாமி

 

தனது தேர்தல் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் பர்பி, தீப்பெட்டி உற்பத்தியாளர்களை அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த வரியை மத்திய அரசிடம் பேசி 12 சதவீதமாக குறைத்தோம். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும். தீப்பெட்டி உற்பத்தியாளர்களை பாதிக்கும் பிளாஸ்டிக் லைட்டரை தடைசெய்யக் கோரி அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அடுத்து அதிமுக ஆட்சி அமைந்ததும், மத்திய அரசிடம் முறையிட்டு பிளாஸ்டிக் லைட்டருக்கு தடை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்”  உறுதியளித்தார்.