×

”அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?”- எடப்பாடி பழனிசாமி

 

அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆட்சியில் இருக்கிற குறையை சொல்ல முடியல ஊர்ந்து போனார் தவழ்ந்து போனார்னு சொல்லவேண்டியது, இதற்காகவா உங்களை முதல்வர், துணை முதல்வர் ஆக்கினார்கள். அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டினால்தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை தீரும். அதனால் நாங்கள் அவர் வீட்டின் கதவைத் தட்டினோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என நம்பிய மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம். நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியும் என்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். நீட் தேர்வு ரத்தானதா? சட்டமன்றத்தில் table மீது ஏறி dance ஆடின கட்சிதான் திமுக. சட்டையை கிழிச்சுகிட்டு வெளிவந்தவர் ஸ்டாலின்நீங்கள் எங்களைப் பற்றி பேசலாமா ஸ்டாலின்?

திமுக ஆட்சியில் இதுவரை எத்தனை தடுப்பணைகள் கட்டித் தரப்பட்டுள்ளது? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குடிமராமத்து திட்டத்தை ஸ்டாலின் அரசால் நிறுத்திவிட்டது. மக்களை தேடி வருவாய்த்துறை என்று ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம். இதற்கு ஸ்டிக்கர் ஒட்டி காது மூக்கு கண்ணு வச்சு உங்களுடன்ஸ்டாலின் என்ற விளம்பரத்தை தேடுகிறார்” என்றார்.