ஸ்டாலின் ஆட்சியை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் SIMPLY WASTE- ஈபிஎஸ்
கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கோவைக்கு எதுவுமே செய்யவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம், பல்வேறு பாலங்கள், ரூ.1200 கோடியில் 3வது கூட்டுக்குடிநீர் திட்டம் என கொண்டுவந்தது அதிமுக அரசு. கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துகொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற முகவரி இல்லாமல் இருக்கிறது. கோவை மாவட்ட வளர்ச்சிக்கு அனைத்து திட்டங்களையும் வழங்கியது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு இப்போது திமுக அரசு Ribbon வெட்டிக்கொண்டிருக்கிறது. எப்பொழுதும் வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின். எப்பொழுதும் நாட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய கட்சிதான் அதிமுக. மக்களைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி நம் கூட்டணி கட்சிகள். ஸ்டாலின் ஆட்சியை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் SIMPLY WASTE.
அதிமுகவில் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக கூட்டணியில்தான் பிரச்சனை இருக்கிறது. 2026 தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமைத்து 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். அறநிலையத்துறையை பயன்படுத்தி கோவில் நிதியில் இருந்து கல்லூரி கட்டுகிறார்களாம். ஏன் அரசாங்க நிதியிலிருந்து கட்ட முடியாதா? ஒரு சாதாரண கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டக் கூட பணம் இல்லாத இந்த அரசு நமக்கு தேவையா? எங்களுக்கும் எங்களுடைய கூட்டணி கட்சிக்கும் இணக்கம் இல்லை என்று சொல்வதற்கு திருமாவளவன் யார்? பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற பாஜகவோடு தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்” என்றார்.