விஜயபாஸ்கர் கூட முதல்வராகலாம்... உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் 6000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு யாராவது பாட்டில் வாங்கணும்னா, ரூ.10 கூடுதலா கொடுக்கணும். அப்ப 1 நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்குது. ஒரு நாளைக்கு 15 கோடி, மாதத்துக்கு 450 கோடி, வருடத்துக்கு 5000 கோடி ஊழல் நடக்கிறது. இந்த பகுதியில் அதிகம் விளையும் முந்திரியில் உள்ள கொட்டையை அகற்ற, மானிய விலையில் அதிமுக ஆட்சியில் இயந்திரம் வழங்கப்படும். கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவரே இல்லை. மருந்து இல்லை. வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அதிமுக எப்படி பாஜகவோடு கூட்டணி வைக்கலாம் என்கிறார்கள் திமுகவினர். இது நம்ம கட்சி. இவங்களுக்கு ஏன் கசக்குது? அதிமுக - பாஜக கூட்டணியால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. 1999ல் பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தபோது, அது மதவாத கட்சியாக தெரியவில்லையா? ஓரணியில் தமிழ்நாடு என அழகாக பெயர் வைத்துவிடார்கள். மக்களே உஷாரா இருங்க. மொபைல் நம்பர் கேட்பாங்க. போன் பண்ணும்போது, நீங்க வெளியூர்ல இருப்பது தெரிந்தா, உடனே வீடு புகுந்து கொள்ளையடிச்சுட்டு போயிடுவாங்க. உஷாரா இருங்க மக்களே!
திமுக கட்சி அல்ல; Corporate Company அதற்கு ஸ்டாலின் chairman. குடும்ப உறுப்பினர்கள் கம்பெனியின் Directors. கருணாநிதி அதற்குப் பிறகு ஸ்டாலின் அதற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பிறகு இன்ப நிதின் ஒருத்தர் வந்து விட்டார். ஒரு அமைச்சர் கூறுகிறார் இன்பநதி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அப்படிப்பட்ட அடிமை அமைச்சர்கள் இருக்கின்ற வரை நாடு உருப்படுமா? உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது. கருணாநிதியின் பேரன் ஸ்டாலினின் மகன். இந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு இந்த நாட்டை ஆள பார்க்கிறார்கள். விட முடியுமா? தமிழ்நாடு இவர்களின் குடும்ப சொத்தா? ஆண்டாண்டு காலமாக இவர்கள்தான் பதவியில் இருக்க வேண்டுமா? திமுக கட்சியில் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவியில் வர முடியும். ஆட்சியில் இருந்தாலும் குடும்பத்தினர் தான் பதவிக்கு வர முன்னுரிமை கொடுப்பார்கள். ஏன் நாங்க எல்லாம் ஆட்சிக்கு வந்தா பிடிக்காதா? விஜயபாஸ்கர் கூட முதல்வராகலாம். கருணாநிதி குடும்பத்திற்காக தமிழ்நாடு பட்டா போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் வெற்றி பெற்று வந்தால் கந்தர்வ கோட்டையையும் பட்டா போட்டு விடுவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள். திமுக காரர்களுக்கு நகரப் பகுதியில் விலை மதிக்க முடியாத இடம் இருந்தால் அதை பட்டா போட்டு விடுவார்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு விலைவாசி குறைய அற்புதமான ஆட்சி, தமிழ்நாட்டில் மலர அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.