☰
×

"உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றா விட்டால் அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வரும்"- ஈபிஎஸ் 

 

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை. மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டும் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதித்தால் அரசுக்கு அவமதிப்பு வழக்கு நேரிடும். எந்த அரசாக இருந்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டியது கடமை. தமிழக அரசு கடமை தவறிவிட்டது.  உச்சநீதிமன்றம் தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது. விஜயின் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே உடைக்கப்பட்டுள்ளது. 

நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் கேரண்டி என்றெல்லாம் டயலாக் பேசி, இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற விஜய்யின் போலி பிம்பங்கள், அவர் கட்சி எம்எல்ஏ-வாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மிகத்தையும் இழந்துவிட்டார் விஜய். பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தற்போது எங்கே போனது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.