தவெகவின் 5 மாத ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் தான்- ஈபிஎஸ்
"-0 " த.வெ.க அரசின் செயல்பாடுகளுக்கு என்னுடைய மதிப்பு இது தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவின் 5 மாத ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் தான். மீனாட்சி அம்மன் கோவிலில் கரண்ட் கட் விவகாரத்தில் கடவுளிடமே பொய் சொல்கிறார் அமைச்சர் நிர்மல் குமார்.. அந்த கடவுளே அவரை பார்த்துக்கொள்வார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டது. கசாப்பு கடை போன்று தமிழ்நாட்டில் ஆட்களை வெட்டி சாய்க்கிறார்கள். தமிழகத்தில் ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவையில் முத்துராமலிங்கத் தேவர் படத்தை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வைத்தார். தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் வழங்கி பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. தவெக ஆட்சியில் யாராலும் நிம்மதியாக வாழவும் முடியாது, சாமி கும்பிடவும் முடியாது" என்றார்.