“அடிக்கடி கட்சி மாறுபவர்கள் எந்த கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள்”- ஈபிஎஸ்
மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி மாறி செல்பவர்கள் எந்த கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கூட்டணியில் யாரை சந்திப்பது, யாரை இணைப்பது உள்பட எந்த முடிவாக இருந்தாலும் அதை அதிமுகதான் முடிவெடுக்கும். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பது எந்த காலத்திலும் நடக்காது. கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என நயினார் நாகேந்திரன் கூறிவருகிறார். அதேபோல் நானும் டிடிவி தினகரனும் ஒன்றாக மேடை ஏறுவோம் என்று நயினார் நயினார் நாகேந்திரன் கூறினார். ஆகையால் டிடிவி தினகரன் உடன் மேடை ஏறுவது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள். அது குறித்து அவர் தான் கூற வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை வரும் போது அதற்கான பதில் தரப்படும். அதிமுக ஆட்சியில் நீர்மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி, வீணாகும் உபரி நீர்களை கண்டறிந்து தடுப்பணைகள் கட்டி சேமிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் வளர்பிறையாக இருந்த தொழில்துறை, திமுக ஆட்சியில் தேய் பிறையாக உள்ளது” என்றார்.