×

“அரசியலிலிருந்து திருமாவளவன் காணாமல் போவார்”- ஈபிஎஸ்

 

அரசியலிலிருந்து திருமாவளவன் காணாமல் போவார், அதிமுக ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. ஒரு சாதியை வைத்து அரசியல் செய்வது இயலாத விஷயம். எம்ஜிஆரை விமர்சனம் செய்த திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போவார். வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதங்களில் தெரியும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏரிகளை நிரப்பும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் 75 சதவீதம் பணிகள் முடிந்தன. மீதமுள்ள 25 சதவீதம் பணிகளை முடிக்காததால் பல ஏரிகள் வறண்டு கிடக்கின்றன” என்றார். 

முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் எம்ஜிஆர் என்ற விமர்சனம் உண்டு. ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தார் எம்ஜிஆர். பாஜக தமிழகத்தில் காலூன்றாமல் போனதற்கும் மிக முக்கியமான காரணம் எம்ஜிஆர்” என்றார்.