×

2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி

 

2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்   என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 ஆண்டுகாலம் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் கட்சிக்காக எந்த உழைப்பும் இல்லாமல், உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் என்ன சாதனை செய்தார்? அவருக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி? உதயநிதி மட்டும்தான் கட்சிக்காக உழைத்தாரா? மற்றவர்கள் யாரும் உழைக்கவில்லையா?

2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும், மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல் தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற அறிவிப்புகளை மட்டும் செய்துவருகிறார்கள். ஒன்றைரை வருடத்தில் திமுக அமைச்சர் சேலம் ராஜேந்திரன் என்ன திட்டத்தைக் கொண்டு வந்திட போகிறார். அதிமுக குறித்து விஜய் பேசாதது குறித்து மற்றவர்கள் ஆதங்கப்பட தேவையில்லை. மக்களுக்காக பணியாற்றிய அதிமுகவை விஜய்யால் எப்படி விமர்சிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.