×

“திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் எந்த நேரத்திலும் வெளியேறலாம்” - ஈபிஎஸ்

 

சேலம் மாவட்டம் மேட்டூரில் மாட்டுவண்டியில் வந்து பொங்கல் விழாவை கொண்டாடினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நிச்சயமாக வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று, அதிமுக ஆட்சி அமைக்கும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. எந்த மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை. இன்றைக்கு தமிழ்நாடு போராட்டக் களமாக மாறிவிட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள்.. வரும் சட்டமன்றத் தேர்தலில் நம் அனைவருக்கும் வழி பிறக்கும். அந்த காலகட்டத்தை பராசக்தி என படமா எடுத்து இருக்காங்க.. அதை வைத்து நாங்க எந்த கருத்தும் சொல்ல இயலாது. பொழுதுபோக்குக்காக வைக்கப்பட்ட காட்சி.

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளனர். அதிமுக தலைமையிலான NDA கூட்டணி வலுவானது. அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்திக்கிறோம்.  திமுக கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் எந்த நேரத்திலும் வெளியேறலாம்” என்றார்.

.