“2 நாட்கள் பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும்”- எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசியலில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து புதுச்சேரியில் தங்கி உள்ள எம்எல்ஏக்களிடம் பொது செயலாளர் பழனிசாமி, கருத்துக்களை கேட்டார். சிலர் தவெக கோரினால், ஆதரவு அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். சிலர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். 2 நாட்கள் பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும் என தெரிவித்துவிட்டு புதுச்சேரியிலிருந்து சென்னை கிளம்பி சென்றார்.
தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்கியுள்ள தனியார் சொகுசு விடுதிக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 7 மணிக்கு வந்தார். அவர் சுமார் ஒன்றரை மணி நேரம் தமிழக அதிமுக எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனைநடத்தினார். பின்னர் 8.15 மணிக்கு புறப்பட்டு சென்றார். கூட்டத்தில் அடுத்தகட்டமாக தமிழக அரசியலில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து எம்எல்ஏக்களிடம் பொது செயலாளர் பழனிசாமி, கருத்துக்களை கேட்டுள்ளார். சிலர் தவெக கோரினால், ஆதரவு அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். சிலர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இறுதியில் கட்சியின் எதிர்காலம் கருதி எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்பதாக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அவர், 2 நாட்கள் பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும் என தெரிவித்துவிட்டு புதுச்சேரியிலிருந்து கிளம்பிச்சென்றார். அதிமுக எம்எல்ஏக்களை வரும் 9ம் தேதி வரை புதுச்சேரியில் தங்கியிருக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ உஷாராணி கூறும்போது, டிவி பார்த்து பொழுதை போக்குகிறோம். புதுச்சேரி நன்றாக உள்ளது. பாண்டிச்சேரியை சுற்றி பார்க்கவில்லை. எம்எல்ஏக்களிடம் பொது செயலாளர் கையெழுத்து எதுவும் வாங்கவில்லை என தெரிவித்தார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏவிடம் கேட்டபோது, கூட்டம் குறித்து நான் ஏதும் தெரிவிக்க முடியாது. சீனியர் நிர்வாகிகள் தெரிவிப்பார்கள் என கூறினார்.