“விஜய் முகத்தை காட்டினா ஓட்டு விழும்னு தவெகவினர் சொல்றாங்க.. அப்புறம் எதுக்கு தெரு தெருவா போறீங்க?”- இபிஎஸ்
மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தாராபுரத்தில் தோல்வி பயத்தில் அதிமுக நிர்வாகிகளை பணியாற்ற விடாமல் தடுக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிமுக கட்சியினரை தாக்குகிறார். நானும் முதல்வராக இருந்தவன் தான், எனக்கும் சட்டம் தெரியும். பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இடைத்தேர்தலை மக்கள் மீது தவெக திணித்துள்ளது. TVK வாக்குகளுக்கு பணம் கொடுப்பதாக மக்கள் கூறுகிறார்கள்! தவெக தலைவர் விஜய் முகத்தை பார்த்தால் வாக்கு விழும் என்கிறார்கள், பிறகு ஏன் வீதி வீதியாக செல்கிறார்? விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திறனற்ற அரசுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். எம்எல்ஏ பதவியை விற்றவர் தேர்தலில் நிற்கிறார். டிராக்டர் ஓட்டினா மட்டும் விவசாயி ஆகிவிட முடியாது.விஜய் இப்போதுதான் டிராக்டரை பார்த்திருக்கிறார். நான் 35 ஆண்டுகளுக்கு முன்பே டிராக்டர் ஓட்டினேன். டிராக்டர் ஓட்டிய முதல்வர் விஜய், விவசாயிகளுக்கு ஏதாவது செய்துள்ளாரா? தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது. எம்.எல்.ஏக்களைத் திருடுபவர்களை எம்.எல்.ஏ. திருடன் என்றுதான் சொல்ல வேண்டும். தவெக திருட்டி சக்தி ஆகிவிட்டது. Currentஐ தொட்டாதான் Shock அடிக்கும்.. இப்போ Current Bill கேட்டாவே Shock அடிக்குது” என்றார்.