“ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவதற்காக கிட்னி திருட்டு! நீங்க உஷாரா இல்லனா கிட்னி காணாமல் போய்விடும்”- இபிஎஸ்
உங்க கனவைச் சொல்லுங்க என ஸ்டாலின் மக்களிடம் கேட்டால், எங்கள் கனவே திமுக ஆட்சி தமிழ்நாட்டை விட்டுப் போகவேண்டும் என்கின்றனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மணச்சநல்லூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவதற்காக எல்லா கிட்னியையும் கழட்டுகிறார் .நீங்க உஷாரா இல்லனா கிட்னி காணாமல் போய்விடும். க்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி முறைகேடு நடந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்னி முறைகேடு குறித்து விசாரிக்கப்படும். ஸ்கேன் செய்து உடல் உறுப்புகள் சரியாக இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தடுத்து அணை கட்டுவதாக அறிவித்தவர் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே .சிவக்குமார். அவரை கூப்பிட்டு வந்து பிரச்சாரம் செய்கிறார் ஸ்டாலின். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்றால் அதிக பள்ளிகளை திறப்பார். ஆனால் இந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளை மூடுகிறார். கிட்டத்தட்ட 200 அரசுப் பள்ளிகளை மூடியிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜரையே அவமதித்து பேசியவர் மாநிலங்களைவை உறுப்பினர் சிவா.அதை கண்டிக்க ஸ்டாலினுக்கு திராணி இருந்ததா? உங்க கனவைச் சொல்லுங்க என ஸ்டாலின் மக்களிடம் கேட்டால், எங்கள் கனவே திமுக ஆட்சி தமிழ்நாட்டை விட்டுப் போகவேண்டும் என்கின்றனர்” என்றார்.