×

“நான் மெரினாவில் கலைஞருக்கு இடமில்லை என சொல்ல காரணம் இதுதான்”- எடப்பாடி பழனிசாமி பளீர்

 

மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த காமராஜருக்கே, சென்னை மெரினாவில் நினைவிடம் வைக்க இடம் கொடுக்காதவர் தான் கருணாநிதி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆரணியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “MGR மனைவி ஜானகி இறந்தபோது அவரை அடக்கம் செய்ய அதிமுக சார்பில், மொினாவில் இடம் கொடுங்கள் என கருணாநிதியிடம் கேட்டபோது, திமுக அரசு அனுமதி மறுத்தது. முதலமைச்சராக இருந்து இறந்தால்தான் மெரினாவில் இடம் கொடுக்கப்படும். ராமபுரம் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யலாம். அரசு சார்பில் காவல்துறை மரியாதை செலுத்தப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்தார்கள். காமராஜர் மறைந்தபோதும் இதேமாதிரி கேட்டபோது, முதலமைச்சராக இருந்து இறந்தால்தான் மெரினாவில் இடம் கொடுக்கப்படும். கிண்டியில் இடம் கொடுக்கிறோம் என்று  கலைஞா் கூறினாா். கலைஞா் முன்பு கூறியதை சுட்டிக்காட்டி அவா் இறந்த போது கிண்டியில் இடம் தருவதாகக்கூறினோம், வேறு ஒன்றும் இல்லை. காமராஜருக்கு ஒரு நியாயம்? கலைஞருக்கு ஒரு நியாயமா? தந்தையையே வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தவர் தமிழ்நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பார்.

கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. திருவண்ணாமலையில் கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. ” என்றார்.