கார், பங்களா தருகிறோம் என புதிதாக அரசியலுக்கு வந்தவர் கூறுகிறார்! இதனை ட்ரம்ப்பால் கூட கொடுக்க முடியாது- சி.வி.சண்முகம்
இன்று ஒருவர் கார் தருவேன் பங்களா வீடு தருவேன் என்று சொல்றார் அமெரிக்கா அதிபர் ட்ரம்பால் கூடு கொடுக்க முடியாது த.வெ.க தலைவர் விஜயை விக்கிரவாண்டி எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் பேசிய சி.வி.சண்முகம் , இன்று புது புதுசா வருகின்றவர்கள் எல்லாம், கருப்பு எம்.ஜி.ஆர், குள்ள எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் நம் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்த எம்.ஜி.ஆர் தான் பதலடி கொடுத்தார்.
இன்று தேர்தல் வாக்குறுதியில் நகரத்தில் உள்ள வீடு இல்லாத மக்களுக்கும் இடம் வாங்கி அடுக்குமாடி வீடு கட்டி கொடுப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நாங்கள் சொன்னா கண்டிப்பாக செய்வோம் என்றவர், இது ட்ரையலர் தான் இன்னும் இன்னும் நிறைய திட்டங்களை எடப்பாடி அறிவிக்க உள்ளார் என்றார். தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு பட்டு வேட்டி வழங்க உள்ளோம் என்றவர், பின்னர் சுதாககரித்துக்கொண்டு பட்டு புடவை வழங்கப்படும் என்றார். தேர்தல் வாக்குறுதிகளை நாங்களும் சொல்லுவோம், திமுகவும் சொல்லும் ஆனால் புதுசு புதுசா வந்திருக்க ஒருத்தர்( காரும், பங்களா வீடும் கொடுக்கப்படும் என்று சொல்றார் அமெரிக்க காரன் ட்ரம்பு கூட கொடுக்க முடியாது என மறைமுகமாக த.வெ.க தலைவர் விஜய் மீது சி.வி சண்முகம் தாக்கி பேசினார்.