×

"அ.தி.மு.கவில் இருக்கிறேனா? இல்லையா? என எனக்கே தெரியவில்லை" - சி.வி.சண்முகம்

 

அ.தி.மு.கவில் இருக்கிறேனா? இல்லையா? என எனக்கே தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

தவெக கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகள் சி.வி.சண்முகத்தை திண்டிவனம் இல்லத்தில் சந்தித்து பேசினர். ஆலோசனை முடிந்து வெளியே வந்த சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நாங்கள் ஆலோசனையில் ஈடுபட்டோம் என யார் சொன்னது? ஒரு வாரம் கழித்து தற்போதுதான் இங்கே வந்துள்ளேன். ஆகையால் எல்லோரும் வருகிறார்கள், என்னை பார்த்து செல்கின்றனர். பேசுகின்றோம். இதில் என்ன ஆலோசனை கூட்டம்? அ.தி.மு.கவில் இருக்கிறேனா? இல்லையா? என எனக்கே தெரியவில்லை. நான் அ.தி.மு.கவில் இருக்கிறேனா? இல்லையா? என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு சொல்லுங்க” என்றார்.