×

பாமக பிச்சையால் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி- சி.வி.சண்முகம்

 

அதிமுகவில் இருந்து கட்சியினர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், “தேர்தலில் அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். அதிமுகவில் இருந்து கட்சியினர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த இபிஎஸ்க்கு ஏன் தயக்கம்? பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை என்றால் செயற்குழுவையாவது கூட்டுங்கள். தேர்தலில் தோல்வி அடைந்தபோது நானே பொறுப்பேற்றுக் கொள்வதாக ஜெயலலிதா கூறினார். உண்மை நிலையை இபிஎஸ் உணர வேண்டும். நாங்கள் என்ன விரோதிகளா?. அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாமக தயவால் வென்றவை. தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி, அதேபோல் வாக்குசதவீதமும் சரிகிறது. யாருடைய கருத்தையும், ஆலோசனையும் கேட்க மாட்டேன் என பழனிசாமி செயல்படுகிறார். தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவின் நன்மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது.கூட்டணியில் பாமக இல்லையென்றால் பழனிசாமியே தட்டுத்தடுமாறிதான் வென்றிருப்பார்.அதிமுகவில் நடந்த தவறுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும்.” என்றார்.