×

“எந்த பொறுப்பும் வேண்டாம்! ஒரு உறுப்பினராக மட்டுமாவது இருக்கிறேன் என்று ஓபிஎஸ் கேட்டார்”- சி.வி.சண்முகம்

 

நீக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த அதிமுக தேவை என்பது தான் எங்களின் கோரிக்கை என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “எனக்கு அ.தி.மு.கவில் எந்த பொறுப்பும் வேண்டாம்.. ஒரு உறுப்பினராக மட்டுமாவது இருக்கிறேன் என்று ஓ.பி.எஸ் கேட்டார்.. தி.மு.கவில் இணைவதற்கு முன்பு கூட கடைசியாக ஒருமுறை கேட்டார்.. ஆனால் முடியவே முடியாது என்று சொல்லி விட்டார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால் இன்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா..? இதை அன்றே செய்திருந்தால் இன்று அவர் முதல்வராக இருந்திருப்பாரே... இப்போது அழைப்பவர், முன்பே அனைவரையும் ஒன்றிணைத்திருக்கலாமே? த.வெ.க முன்பு அதிமுகவுடன் கூட்டணி பேசியபோது, அதை தடுத்தவர் அவர் தான். தேமுதிக, டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை மதிக்கவே இல்லை. தொடர்ந்து அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிந்து வருகிறது. நீக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த அதிமுக தேவை என்பது தான் எங்களின் கோரிக்கை. வேறு எதையும் நாங்கள் கோரவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றே கோருகிறோம். அதை செய்யாததால் தான் தோற்றுள்ளோம்” என்றார்.