×

TVK - ADMK இடையே மோதல்.. தவெக நிர்வாகியை அடித்து விரட்டிய அதிமுகவினர்

 

செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்வணக்கம்பாடியில் முன்னாள் அதிமுக அமைச்சர் அமர்ந்திருந்த கார் முன்னே தவெக பூத் ஏஜெண்டை அடித்து வெளியேற்றிய அதிமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர்பாளையம் வாக்குச்சாவடி என் 219 இல் செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு அடுத்த தேசூர் பாளையம் கிராமத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் என இரு தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக வாக்களித்தனர்.  வாக்கு சாவடி மையத்தில் அதிமுக மற்றும் திமுக தவெக ஆகிய கட்சிகளைச் சார்ந்த பூத் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்தனர். அப்பொழுது மூதாட்டி ஒருவர் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்துக்குள் சென்றார். 

கண்ணாடியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்ததால் தனது மகனை வாக்களிப்பதற்காக உள்ளே அழைத்தார்.  தவெக பூத்த ஏஜென்ட் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அதிமுக மற்றும் தவெக பூத் ஏஜென்ட் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக பூத் ஏஜென்டை வாக்கு சாவடி மையத்திற்கு வெளியேற்றி அங்கு வெளியே நின்று இருந்த அதிமுகவினர் தவெக பூத் ஏஜெண்டை அடித்து வெளியேற்றினர்.அப்போது அந்த காரில் வந்த முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் காருக்கு முன்னதாக தவெக பூத் ஏஜென்ட் அடுத்து வெளியேற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தவெக பூத் ஏஜெண்டை தாக்கியவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.