#BREAKING பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11! ஒப்பந்தம் கையெழுத்து
Mar 23, 2026, 15:30 IST
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டில் அதிமுக- பாஜக தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவகத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவில் அதிமுக- பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் பாஜகவுக்கு 27 இடங்களும், அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மற்ற கட்சிகளுடன் இன்றிரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.