×

#ELECTION BREAKING டிடிவிதினகரன், பாமகவின் 'செக்' - திணறும் இபிஎஸ்

 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணியும் களம் காண்கின்றன. இதனிடையே, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்தே களம் காண உள்ளார். ள

இந்நிலையில் மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பியூஷ் கோயல் முன்னிலையிலேயே, "எங்களுக்கு என்ன தேவையோ அதை பா.ஜ.க-விடம் கேட்டு வாங்கிக்கொள்கிறோம்" என டி.டி.வி.தினகரன் எடப்பாடியின் முகத்திற்கு நேராகவே சீறியிருக்கிறார். ஒரு பக்கம் பா.ஜ.க-வின் நெருக்கடி, மறுபக்கம் "எங்க ஓட்டு இல்லாம நீங்க ஜெயிக்க முடியாது" என மிரட்டும் பா.ம.க. 70 இடங்களை வாரி வழங்கினால் அ.தி.மு.க 150 இடங்களுக்குக் கீழ் சுருங்கிவிடும். கட்சியா? அல்லது கூட்டணியா?" என்கிற தர்மசங்கடத்தில் எடப்பாடியை அமித்ஷா நிறுத்தியிருக்கிறார்.