குளித்தலை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
குளித்தலை சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய துணை பெருந்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி
தோகைமலை ஒன்றிய கவுன்சிலர்கள்.
1. கள்ளை ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் திருமதி சி. பாப்பாத்திசின்னவழியான் (அஇஅதிமுக) தோகைமலை ஒன்றிய துணை பெருந்தலைவர்
2. நாகனூர் ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் திருமதி ச தனலட்சுமி சங்கர் (அஇஅதிமுக)
3. கல்லடை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் திருமதி வீ.வளர்மதி ஆசைக்கண்ணு (அஇஅதிமுக)
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவையென உணர்ந்து, கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுக & தமாகவை சார்ந்த மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணைந்தனர். குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. R. மாணிக்கம் உடனிருந்தார்.என்று குறிப்பிட்டுள்ளார்.