×

முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி

 

 இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரனமாக மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் குணமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.