M.G.R திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை... இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-...
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.
இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர்.ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு) - Bachelor of Visual Arts (Cinematography)
2. இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)
3. இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)
4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
5. இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)
6. இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ) Visual Arts (Animation and Visual Effects) Bachelor of Visual Arts (Animation and Visual Effects)...
எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதற்கட்டமாக 12.05.2026 ~ 10.00 மணி முதல் www.filminstitute.tn.gov.in இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை, பயனாளர் கையேட்டின்(User Manual) அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்தும், இரண்டாம் கட்டமாக அனைத்து உரிய ஆவணங்களையும் 02.06.2026 மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.