விருப்பமனு வாங்க ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்! வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்
Updated: Feb 9, 2026, 19:25 IST
சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடியது.
தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் பணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன் தினம் தொடங்கி வைத்தார். 2 நாட்களாக விருப்ப மனுக்களை தொண்டர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிக நிர்வாகிகள் இன்று ஆர்வம் காட்டவில்லை. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடியது. வரும் 12 ஆம் தேதிக்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் 3-வது நாளான இன்றும் தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது