கமலிடம் விருப்ப மனு தொகையை திருப்பி கேட்கும் நிர்வாகிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியதைத் தொடர்ந்து விருப்ப மனுவுக்காக ரூ.50,000-ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை” என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். ‘ஆண்டவரே ஆண்டவரே’ என்று உங்களை பின்தொடர்ந்தவர்கள் எல்லாம், இப்போது புலம்பிவருகின்றனர்.எத்தனையோ இளைஞர்களின் நேரம், காலம், ஆர்வம் எல்லாம் நாசமானது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியதைத் தொடர்ந்து விருப்ப மனுவுக்காக ரூ.50,000-ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சீட் கிடைக்கும் என நம்பி 50 முதல் 60 பேர் வரை பணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் விண்ணப்பித்த வேட்பாளர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.