ரயில்கள் ரத்து எதிரொலி - சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
ரயில்கள் ரத்து எதிரொலியாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.பல்லவன், வைகை, சோழன் அதிவிரைவு ரயில் சேவைகள் இன்று (டிச.02) ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ள்ளது. சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரத்து என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில்கள் ரத்து எதிரொலியாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் ரயில்வே சந்திப்பு, திருக்கோவிலூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக 4 இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.