ஆதவ் அர்ஜுனா சர்ச்சை கருத்து... பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்.!!
த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கி உள்ளார்.அவர் அப்படி என்ன எழுதினார் என்பதை இங்க விரிவாக பார்ப்போம்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல்குமார் மற்றும் பலர் மீது கரூர் டவுன் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 105 பிரிவின் கீழ் கொலைக்குச் சமமில்லாத குற்றவியல் மரணம் விளைவித்தல், பிரிவு 110ன் கீழ் குற்றவியல் மரணம் விளைவிக்க முயற்சித்தல், பிரிவு 125ன் படி, மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல், பிரிவு 223-ன்படி அரசு அதிகாரியால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதியழகன் தலைமறைவான நிலையில், கரூர் குஜிலியம்பாறை பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, தவெக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில்,