×

ஆண் ஆதிக்க களத்தில் களமாடிய ஓர் பெண் ஆளுமை ஜெயலலிதா - ஆதவ் அர்ஜுனா புகழாரம்

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகழாரம் சூட்டியுள்ளார். 

சமூகத்தைப் போல் அரசியலிலும் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த களத்தில் களமாடிய ஓர் பெண் ஆளுமை. அறிவு மற்றும் தைரியத்தை மட்டுமே பற்றிப் பிடித்து தனக்கு எதிரான அனைத்து சூழ்ச்சிகளையும் வென்று காட்டிய மகத்தான சாதனையாளர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள். தமிழ்நாடு தேர்தல் வரலாற்றிலேயே 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி அதில் வெற்றியும் கண்ட  ஒரே ஆளுமை என்று பெயர்போன தலைவி.