கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா
Nov 16, 2026, 18:20 IST
டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்தார்.
சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆகியோரை நேரில் சந்தித்தார்.தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைத்து 6 மாதம் நிறைவு செய்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் தலைவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார்.