×

“விஜயின் எல்லா பரப்புரை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பாதிப்பு”- ஏடிஜிபி குற்றச்சாட்டு

 

விஜயின் எல்லா பரப்புரை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், “விஜய்யின் பிரச்சாரம் எல்லா இடங்களிலும் தாமதமாகதான் நடைபெற்றது. அதேபோல எல்லா பரப்புரை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 14 பேரும், விழுப்புரத்தில் 42 பேரும், திருச்சியில் 12, அரியலூரில் 6 பேரும் காயமடைந்தனர். விக்கிரவாண்டியில் 42 பேர் காயமடைந்தனர். நாமக்கல் பிரச்சார கூட்டத்தில் 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநாட்டில் 16 பேர் காயமடைந்தனர். திருவாரூரில் 17 பேரும், நாகை 5 பேரும், கரூரில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் 25000 முதல்  30,000 பேர் வரை வந்திருக்கலாம்.

கரூர் வேலுச்சாமிபுரம் 60 அடி சாலை, இரண்டுபுறமும் வெளியேறுவதற்கான இடம் இருந்தது. மக்கள் வெளியேற வேண்டும் என நினைத்திருந்தால் வெளியேறி இருக்க முடியும். விஜயை பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் மக்கள் விலகி செல்லவில்லை. கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தவில்லை” என்றார்.