#BREAKING தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் அறிவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 இலட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ.5 இலட்சமும் நிவாரண நிதியாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.
இந்நிலையில், இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முறையிட்டதன்பேரில், அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.50 இலட்சத்தில் ஏற்கனவே வழங்கிய খ.25 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 இலட்சம் வீதம் ரூ.3.25 கோடியும், கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.10 இலட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.5 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.