×

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!!

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் வருகின்ற 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த 22 மாவட்டங்களில் அழகு நிலையங்கள் , சலூன்கள் குளிர்சாதன வசதி இயலாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். பூங்காக்கள் விளையாட்டு பூங்காகள் காலை 6 மணி
 

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் வருகின்ற 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த 22 மாவட்டங்களில் அழகு நிலையங்கள் , சலூன்கள் குளிர்சாதன வசதி இயலாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். பூங்காக்கள் விளையாட்டு பூங்காகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் செயல்படலாம். வேளாண் உபகரணங்கள் பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என பல்வேறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் இந்த சலுகைகள் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்புடன் புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை செய்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் பொது போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை செய்கிறார். மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை, அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், கொரோனா குறைந்த மாவட்டங்களில் நகர்ப்புற பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளனர்.