×

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசால் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் வருகின்ற 18ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு தளர்வுகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நேரம் உயர்த்தப்படும் மற்றும் திருமணம் இறப்பு
 

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசால் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் வருகின்ற 18ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கு தளர்வுகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நேரம் உயர்த்தப்படும் மற்றும் திருமணம் இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், மருத்துவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

அதேசமயம் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளதால் தளர்வுகள் அளிப்பதில் கூடுதல் கவனம் தேவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.