×

“9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை” : தமிழக அரசு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் 2வது நாளாக விவாதம் தொடங்கியது. இந்நிலையில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.உள்ளாட்சி தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிகள் அமைக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்
 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் 2வது நாளாக விவாதம் தொடங்கியது.

இந்நிலையில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.உள்ளாட்சி தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிகள் அமைக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவான 9 மாவட்டங்களில் ஊராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலமும் மேலும் ஆறு மாதம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல்அமைச்சர்கள் கே.என். நேரு, பெரியகருப்பன் சட்ட மசோதாக்களை பேரவையில் தாக்கல் செய்தனர்.ஜூன் 30ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனி அலுவலர்கள் பதவி காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.