×

முதலமைச்சர் விஜய்க்கு டாடா காட்டி வழியனுப்பிய நடிகை த்ரிஷா..!

 

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க நடிகை திரிஷா மஞ்சள் புடவையில் வந்திருந்தார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் முதல் வரிசையில் முதலமைச்சர் விஜய்யின் பெற்றோருக்கு அருகிலேயே திரிஷாவுக்கும் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அடுத்து, தேசியக்கொடி ஏற்றி கொடி வணக்கம் முதலமைச்சர் விஜய். அதனைத் தொடர்ந்து காவல்துறை கூட்டுக்குழல் இசைக்குழுவினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றி உரையாற்றிய பின்னர், முதலமைச்சர் விஜய் சிறப்பு கான்வாய் பாதுகாப்புடன் நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது சிறப்பு பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த நடிகை த்ரிஷா மற்றும் முதலமைச்சரின் பெற்றோர் கையசைத்து டாடா காட்டி வழியனுப்பினர். தற்போது இது குறித்த காணொளிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது கையசைத்த முதலமைச்சர் விஜய்...bye சொன்ன நடிகை த்ரிஷா!#CMVijay #Trisha #IndependenceDay #TamilNadu #News7Tamil pic.twitter.com/t5DCHnUDGi

— News7 Tamil (@news7tamil) August 15, 2026