என் வாழ்க்கையை நரகமாக்கிய அரக்கன் இறந்துவிட்டான் - நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பதிவுக்கு கண்டனம்..!
மறைந்த நடிகர் நானா படேகரை "என் வாழ்க்கையை நரகமாக்கிய அரக்கன் இறந்துவிட்டான்" என நடிகை தனுஸ்ரீ தத்தா விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2008-ல் தமக்கு நானா படேகர் பாலியல் தொல்லை அளித்ததாக 2018-ல் தனுஸ்ரீ குற்றம்சாட்டியிருந்த நிலையில், போதிய ஆதாரமின்மையால் காவல்துறை அவ்வழக்கை முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் நானா படேகர் மரணம் அடைந்த நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
'மீ டு' புகாருக்கு பிறகு எனது வாழ்க்கை நரகமாகிவிட்டது. நான் எங்கு சென்றாலும் குண்டர்கள் என்னை பின்தொடர்ந்த னர். கடந்த 2024-ம் ஆண்டில் எனது காரின் பிரேக் கம்பிகளை யாரோ துண்டித்து என்னை கொல்ல முயன்றனர். ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் செய்த குற்றங்கள் மறைந்துவிடாது. சிலர் என்னை அவரை மன்னித்துவிடும்படி கூறுகி றார்கள்.
ஆனால் அவர் என்னிடம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை. என்னை பொறுத்த வரை எனது வாழ்க்கையை நரகமாக்கிய ஒரு கொடிய அரக்கன் இப்போது அழிந்துவிட்டான். அவர் மறைந்த பிறகும் என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.