×

வடிவேலுவுடன் மீண்டும் நடிப்பதை விட பிச்சை எடுத்துக் கூட வாழ்ந்துவிடுவேன் - நடிகை சோனா..!

 

‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக அறியப்படும் சோனா.

அதற்குப் பிறகு வடிவேலு உள்ளிட்ட பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்தார். மேலும் அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தொழிலதிபரான சோனா, நடிகையான பிறகு வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். ஆனால் அந்த திரைப்படம் பெரும் நஷ்டத்தை கொடுத்தது.சினிமா மட்டுமல்லாமல் சோனா Uniq என்ற பேஷன் கடையும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் அண்மையில் அளித்த பேட்டியில் வடிவேலு தொடர்பாக சோனா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில்,"வடிவேலு சார் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதும், அவரை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால், எனக்கு அவருடன் செட்டாகவில்லை. 'குசேலன்' படத்தின் படப்பிடிப்பில் அவரது குணாதிசயம் (கேரக்டர்) என்னைப் பலவிதமாகப் பாடாபடுத்திவிட்டது," என்று சோனா வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், "படமும் சரியாகப் போகவில்லை. அதன்பின் எங்களுக்கு (வடிவேலுவுடன் இணைந்து நடிக்க) 16 பட வாய்ப்புகள் வந்தன," என்றும் குறிப்பிட்டார்.

"என் மானமும் மரியாதையும் எனக்கு மிகவும் முக்கியம். ரோட்டில் நின்று பிச்சைகூட எடுத்துவிடலாம், அந்த மாதிரி நடித்துச் சம்பாதிக்கிற காசு வேண்டாம் என்ற முடிவில் நான் தெளிவாக இருந்தேன். வடிவேலுவைப் பற்றி காரித்துப்பும் ஆட்கள் பலர் இருக்கிறார்கள். அவர் நடிப்பில் ஒரு லெஜெண்ட் தான், ஆனால் மனிதராக அவர் மதிப்பில்லாதவர்,

வடிவேலு பற்றி பேசும் அளவுக்கு அவர் அவ்வளவு வொர்த் கிடையாது. நான் அவர் கூட எந்த படத்திலும் இனிமேல் நடிக்க விரும்பவில்லை. வடிவேல் சார் பத்தி வேற யார்கிட்டயாவது என்ன நினைக்கிறீங்க என்று கேட்டுப்பாருங்க. கழுவி கழுவி ஊத்துவாங்க. அதையே நானும் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்.  எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுவுடன் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம்.  எனத் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு சோனாவின் பேச்சு பெரியளவில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் இணையத்தில் பரவலாக ஷேட் செய்யப்பட்டு வருகிறது. 

சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் தான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் அதே போல சோனாவும் தன்னைப் பற்றிய சர்ச்சையாக இருந்தாலும் சரி நல்ல விஷயமாக இருந்தாலும் சரி அதை ஓபன் ஆக பேசி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது