நடிகை ராதிகா சரத்குமார் தாய் கீதா காலமானார்!
Sep 22, 2025, 04:55 IST
எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா காலமானார். அவருக்கு வயது 86.வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் அவர் காலமானார்.
கீதா ராதா கடந்த பல ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கையிலும், சமூக சேவையிலும் கவனித்தும் பங்களித்தும் வந்தவர்.அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை, எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போய்ஸ் கார்டன், சென்னை – 86 இல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இன்று 22 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல், பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.