“சரக்கு பாட்டில் காசு எல்லாம் ஒரு நாள் சுகம்! ஒரு நாள் சுகம் வேண்டுமா?”- நமிதா
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை எல்லார் கையிலேயும் ஒரு சூப்பர் பவர் வரும், அதை கரெக்டா யூஸ் பண்ணி முடிவெடுக்க வேண்டும் என நடிகை நமிதா கூறினார்.
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து பாஜக செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மணலி சின்னசேக்காடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நமிதா, “ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தார்கள். அம்மா மெஸ் ஓபன் பண்ணி எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாங்க, எவ்வளவு கம்மி கம்மி காசுல சாப்பாடு கொடுத்தாங்க, நிறைய கிப்ட் கொடுத்தாங்க, சைக்கிள், மெஷின், லேப்டாப், பெண்களுக்கு கல்வியில் அதிகமா உதவி செய்தார்கள். உங்களுக்கு வாழ்க்கையில் மீண்டும் அது போன்று வசதி வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு ஆகணும். ஏற்கனவே பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டங்கள் மூலம் மூன்று கோடி மக்களுக்கு வீடு கொடுத்தாச்சு. இலவசமாக வீடு கட்டி கொடுத்தாச்சு,
ஐந்து வருடத்திற்க ஒருமுறை நம்ம எல்லார் கையிலேயும் ஒரு பவர் வரும் அந்தப் பவர் ஓட்டு. சூப்பர் பவர் இது. அந்த பவரை யூஸ் பண்ணி இந்த வாட்டி கரெக்டா முடிவெடுக்கணும். நம்ம குடும்பத்தின் முன்னேற்றம் குழந்தைகளை நிம்மதி தான் இந்த ஒரு ஓட்டு. நம்ம எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. நம்ம குழந்தைக்காக அடுத்த ஐந்து வருடம் வசதி கொடுக்கப் போகிறோம் . இந்த வாட்டி எடப்பாடி முதலமைச்சராக ஆக வேண்டும், அது நம்ம கையில தான் இருக்கு. யாராவது சரக்கு பாட்டில் தரேன், காசு தரேன் சொல்லுவாங்க... அது நமக்கு ஒருநாள் சுகம். அதுக்கப்புறம் ஐந்து வருடம் கஷ்டம் கஷ்டம் கஷ்டம்! சரியா பாட்டி.... கரெக்டா நீங்க தான் முடிவெடுக்க வேண்டும். உங்களுக்கு ஒரு நாள் சுகம் வேண்டுமா? ஐந்து வருடம் குழந்தையின் சுகம் வேண்டுமா? இந்த வாட்டி குடும்பப் பெண்கள் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டும். இந்த வாட்டி முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும். இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும், ஐந்து வருடம் நிம்மதி, வசதி. அதற்கு நான் கேரண்டி” என்றார்.