"ஜனநாயகன் பாத்தா தற்குறியா? உங்களுக்கு என்ன பிரச்சனை?"- நடிகை மீஷா கோஷல் காட்டமான பதில்
பிடித்த ஹீரோவின் படத்தைப் பார்க்க அனைவருக்கும் உரிமையுள்ளது என நடிகை மீஷா கோஷல் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
"ஜனநாயகன் பாத்தா தற்குறியா?" 😳 நடிகை மீஷா கோஷல் காட்டமான பதில்! | Provoke TV#JanaNayagan#MeeshaGhoshal#ThalapathyVijay#Vijay#JanaNayaganMovie#JanaNayaganUpdate#Thalapathy#Kollywood#TamilCinema#ExclusiveInterview#CelebrityInterview#MovieUpdate#CinemaNews… pic.twitter.com/fr9OdlCZKh
— ProvokeTV (@Provoke_TV) July 30, 2026
இதுதொடர்பாக நடிகை மீஷா கோஷல் வெளியிட்டுள்ள வீடியோவில், “தங்களுக்கு பிடித்த ஹீரோவின் படத்தை பார்க்க எல்லோருக்கும் உரிமை உள்ளது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பம், தேர்வு. தளபதி விஜயின் ரசிகர்கள் என்பதற்காக ஏன் எங்கள் மீது இத்தனை வெறுப்பு? அப்படி என்ன தவறு செய்தோம்? உங்களுக்கு என்ன பிரச்சனை? வேறு ஹீரோவாக இருந்தால் இப்படி பேசுவீர்களா? நான் விஜய் ரசிகை என்பதால் என்னை Unfollow செய்வீர்கள் என்றால் செய்துகொள்ளுங்கள். எங்களுக்கு பிடித்த ஹீரோவை கொண்டாடினால், அவர் படத்தை பார்த்தால் நாங்கள் தற்குறிகளா? ஜனநாயகன் பட வெளியீட்டையும், மாணவர் போராட்டத்தையும் தொடர்புபடுத்துவது அர்த்தமற்றது. விஜய் ரசிகர்கள் என்பதால் எங்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? எங்களை 'தற்குறிகள்' என விமர்சிப்பதும், 'ஜனநாயகன்' ரிலீஸை மாணவர் போராட்டத்துடன் தொடர்புபடுத்துவதும் அர்த்தமற்றது. விருப்பமில்லை என்றால் என்னை அன்ஃபாலோ செய்துகொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.