×

முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசி இருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி..!

 

நடிகை ஹன்சிகா மோத்வானி முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசி இருக்கிறார். "என் குடும்பம் என்னை எதற்காகவும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை."

"தவறான ரயிலில் ஏறிவிட்ட பின் கஷ்டப்படுவதை விட அதில் இருந்து இறங்கிவிடுவது தான் சிறந்தது. அதனால் இது பரவாயில்லை. நான் வருத்தப்படவில்லை. குடும்பத்தின் ஆதரவு இருக்கிறது. தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என ஹன்சிகா கூறி இருக்கிறார். 

2011ம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா.தொடர்ந்து 'வேலாயுதம்', 'அரண்மனை', 'ரோமியோ ஜுலியட்', 'சிங்கம் 2', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட படங்களில் நடித்திருத்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் மும்பை பந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 11-ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.